​தில்லியில் இன்று (சனிக்கிழமை) புதிதாக 1,142 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. (கோப்புப்படம்) 
இந்தியா

தில்லியில் புதிதாக 1,142 பேருக்கு கரோனா

​தில்லியில் இன்று (சனிக்கிழமை) புதிதாக 1,142 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

DIN


தில்லியில் இன்று (சனிக்கிழமை) புதிதாக 1,142 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தில்லி கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய இன்றைய செய்திக் குறிப்பு வெளியாகியுள்ளது. இதன்படி, அங்கு புதிதாக 1,142 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 29 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 1,29,531 ஆக உயர்ந்துள்ளது. மொத்த பலி எண்ணிக்கை 3,806 ஆக உயர்ந்துள்ளது.

அதேசமயம், இன்று மேலும் 2,137 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 1,13,068 பேர் குணமடைந்துள்ளனர்.இன்றைய தேதியில் அங்கு 12,657 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தில்லியில் இன்று மட்டும் 20,509 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 9,29,244 பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரபல மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் காலமானார்!

அசாமில் ரயில் மோதியதில் 8 யானைகள் பலி! பெட்டிகள் தடம்புரண்டன!

மீண்டும் ஒரு லட்சத்தை நோக்கி தங்கம் விலை! அதிர்ச்சி கொடுக்கும் வெள்ளி!!

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைந்தது!

சென்னையில் 3-ம் நாளாக செவிலியர்கள் போராட்டம்!

SCROLL FOR NEXT