முகப்பு
இந்தியா

ஆந்திரத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 7813 பேருக்கு கரோனா; 52 பேர் பலி

ஆந்திரத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 7813 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:00 PM
கோப்புப் படம்
பகிர்:

ஆந்திரத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 7813 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தென் மாநிலங்களில் கடந்த சில நாள்களாக கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக ஆந்திரத்தில் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 7813 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 52-பேர் பலியாகியுள்ளனர்.  

இதையடுத்து அங்கு ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கை 88,671-ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் 44,431 பேர் தற்போரை சிகிச்சையில் உள்ளது. மேலும் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 3,208 பேர் குணமடைந்தனர். இத்துடன் அங்கு கரோனாவிலிருந்து ஒட்டுமொத்தமாக 43,255 பேர் குணமடைந்துள்ளனர். 

மேலும் அங்கு கரோனா தொற்றால் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 985 ஆக உள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →