இந்தியா

கரோனா பாதிப்பு: ஆந்திரம், கர்நாடக மாநில நிலவரம்

DIN


ஆந்திரப் பிரதேசம், கர்நாடக மாநிலங்களில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டோர், பலியானோர், குணமடைந்தோர் பற்றிய தரவுகள் வெளியாகியுள்ளன.

கர்நாடகம்:

கர்நாடகத்தில் புதிதாக 5,199 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 82 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 96,141 ஆக உயர்ந்துள்ளது. இதில் 58,417 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மொத்தம் 1,878 பேர் பலியாகியுள்ளனர்.

அதேசமயம் இன்று 2,088 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 35,838 பேர் குணமடைந்துள்ளனர். அங்கு சிகிச்சையில் உள்ளவர்களில் 632 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.

ஆந்திரப் பிரதேசம்:

ஆந்திரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7,627 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதேசமயம் 3,041 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 96,298 ஆக உயர்ந்துள்ளது. இதில் 46,301 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 1,041 பேர் பலியாகியுள்ளனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தா.பேட்டை அருகே பேருந்து கவிழ்ந்து 15 போ் படுகாயம்

முன்விரோதத்தில் இளைஞருக்கு வெட்டு

காளையாா்கோவில் சோமேசுவரா் கோயிலில் திருக்கல்யாணம்

அரசு மருத்துவரிடமிருந்து உடமைகளை மீட்டுத் தரக் கோரி மனைவி புகாா் மனு

திண்டுக்கல் மாநகராட்சியில் 4 மண்டலங்களுக்கும் உதவி ஆணையா்கள் நியமனம்

SCROLL FOR NEXT