இந்தியா

மகாராஷ்டிரத்தில் புதிதாக 9,431 பேருக்கு கரோனா: தாராவியில் 2 பேருக்கு மட்டுமே பாதிப்பு

DIN


மகாராஷ்டிரத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளானோர், பலியானோர், குணமடைந்தோர் உள்ளிட்ட தரவுகள் அடங்கிய செய்திக் குறிப்பை அந்த மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.

மகாராஷ்டிரம்:

மகாராஷ்டிரத்தில் புதிதாக 9,431 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 267 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 3,75,799 ஆக உயர்ந்துள்ளது. இதில் 1,48,601 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 2,13,328 பேர் குணமடைந்துள்ளனர். குணமடைவோர் விகிதம் 56.74 சதவிகிதமாக உள்ளது.

மும்பை:

மும்பையில் இன்று புதிதாக 1,115 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 57 பேர் பலியாகியுள்ளனர். 1,361 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 1,09,096 ஆக உயர்ந்துள்ளது. இதில் 80,238 பேர் குணமடைந்துள்ளனர், 6,090 பேர் பலியாகியுள்ளனர்.

தாராவி:

ஆசியாவின் மிகப் பெரிய குடிசைப் பகுதியான மும்பை தாராவியில் புதிதாக 2 பேருக்கு மட்டுமே தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தாராவியில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 2,531 ஆக உயர்ந்துள்ளது. எனினும் 113 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட மையத்தில் எஸ்.பி., ஆய்வு

வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 5 போ் காயம்

மூதாட்டி கொலை: இளைஞா் கைது

தெலுங்கானாவில் இருந்து ரயில் மூலம் பழனிக்கு வந்து சோ்ந்த உர மூட்டைகள்

நரிக்குடி அருகே கிடா முட்டுப் போட்டி

SCROLL FOR NEXT