இந்தியா

பாகிஸ்தானில் 1000-க்கும் கீழ் குறைந்த ஒருநாள் பாதிப்பு

DIN

பாகிஸ்தானில் புதிதாக கரோனா பாதிப்புக்குள்ளானோர் குறித்த விவரங்களை அந்நாட்டின் தேசிய சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது.

அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் 936 பேருக்கு கரோனா தொற்று உறுதி ஆகியுள்ளது. இதையடுத்து அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,74,908 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 23 பேர் உயிரிழந்ததை அடுத்து இறப்பு எண்ணிக்கை 5,865 ஆக உயர்ந்துள்ளது.

அதேசமயத்தில் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று இதுவரை 2,42,436 பேர் குணமடைந்துள்ளனர். மேலும், 1,229 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர். 

மொத்த பாதிப்பில் சிந்து மாகாணத்தில் - 1,18,824, பஞ்சாப் - 92,279, கைபர்-பக்துன்க்வா- 33,510, இஸ்லாமாபாத் - 14,938, பலுசிஸ்தான்- 11,624, கில்கித்-பல்திஸ்தான்- 2,010 மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 2,040 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 19,610 உள்பட இதுவரை 19,09,846 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

பாகிஸ்தானில் கடந்த சில மாதங்களில் முதல்முறையாக ஒருநாள் பாதிப்பு 1000-க்கும் கீழ் குறைந்துள்ளது. நேற்றைய தினம் பரிசோதனை எண்ணிக்கை குறைந்துள்ளதே பாதிப்பு குறைந்ததற்கு காரணம் என்று கூறப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

8 வாக்குச் சாவடிகளில் மறுதோ்தல் நடத்த வலியுறுத்தி நீதிமன்றத்தில் வழக்கு

குடியாத்தம் கெங்கையம்மன் திருவிழா ஆலோசனைக் கூட்டம்

திருப்பத்தூரில் வெப்ப அலைகள் குறித்த ஆலோசனை கூட்டம்

பந்துவீச்சில் அசத்திய பெங்களூரு; 147 ரன்களுக்கு ஆட்டமிழந்த குஜராத் டைட்டன்ஸ்!

ஐஜிஐ மெட்ரோ நிலையம், பள்ளியில் பாதுகாப்பு ஒத்திகைப் பயிற்சி

SCROLL FOR NEXT