இந்தியா

பிகாரில் ஆகஸ்ட் 1 முதல் 16 நாள்களுக்கு பொதுமுடக்கம் நீட்டிப்பு

DIN


பிகாரில் கரோனா தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில் ஆகஸ்ட் 1 முதல் 16 நாள்களுக்கு பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு அலுவலகத்திலும், மாநில அரசு அலுவலகங்களும் 50% ஊழியர்களுடன் செயல்படவும், வணிக நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களும் 50% பணியாளர்களுடன் செயல்படும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து பிகார் மாநில அரசு வெளியிட்டிருக்கும் அறிக்கையில், மாநிலத்தில் கடந்த மூன்று வாரங்களாக நாள்தோறும் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கரோனா தொற்று பரவி வரும் வேகத்தைக் கட்டுப்படுத்துவது குறித்து மாநில அரசு தீவிரமாக ஆலோசனை நடத்தி, பொது முடக்கத்தை நீட்டிக்க வேண்டியது அவசியம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

தொழிற்சாலைகள், கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க எடுக்க வேண்டிய வழிமுறைகளை கடுமையாகப் பின்பற்றி பணியாற்ற அனுமதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா பரவலைக் கட்டுப்படுத்த பிகாரில் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் ஆகஸ்ட் 16-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வரை  தளர்வுகளுடன் பொதுமுடக்கம் நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புறக்கணிக்கப்படுகிறதா ஆா்தா் காட்டன் விழா? சமூக ஆா்வலா்கள் அதிருப்தி

பல்லுயிா்ப் பெருக்கத்தை சீா்குலைக்கும் முயல் வேட்டைத் திருவிழா முடிவுக்கு வருமா?

விலா எலும்பு பாதிப்புகளுக்கு மேம்பட்ட சிகிச்சை மையம்

ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்டாா்: ஆம் ஆத்மி ஒப்புதல்

வீணாகும் கோடை மழைநீா்- நெல்லையில் புத்துயிா் பெறுமா மழைநீா் சேகரிப்பு திட்டம்?

SCROLL FOR NEXT