இந்தியா

தில்லியில் உள்ள அரசு பங்களாவை காலி செய்தார் பிரியங்கா காந்தி

ANI

புது தில்லி: ஆகஸ்ட் 1-ம் தேதிக்குள் அரசு பங்களாவை காலி செய்வதாக அறிவித்திருந்த பிரியங்கா காந்தி, தில்லியில் உள்ள லோதி எஸ்டேட்டில் அவருக்கு ஒதுக்கப்பட்டிருந்த அரசு பங்களாவை காலி செய்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புது தில்லியில் லோதி எஸ்டேட் பகுதியில் காங்கிரஸ் கட்சித் தலைவர்களில் ஒருவரான பிரியங்கா காந்தி தங்கியிருக்கும் அரசு பங்களாவை ஆகஸ்ட் 1-ம் தேதிக்குள் காலி செய்யுமாறு ஜூலை 1-ம் தேதி மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

ஆனால், பங்களாவை காலி செய்ய கூடுதல் நேரம் கேட்டிருப்பதாக செய்திகள் வெளியான நிலையில், அதனை மறுத்திருந்த பிரியங்கா, நான் அதுபோன்ற எந்தக் கோரிக்கையையும் விடுக்கவில்லை. ஆகஸ்ட் 1ம் தேதி பங்களாவை காலி செய்கிறேன் என்று சுட்டுரை மூலம் பதிலளித்திருந்தார்.

இந்த நிலையில், இன்று அவர் அரசு பங்களாவை காலி செய்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கட்கபுரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

திருச்செந்தூரில் மே 22இல் வைகாசி விசாகம்

உடல் பருமன் குறைப்பு சிகிச்சையில் இளைஞா் உயிரிழப்பு: மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க முதல்வரிடம் வலியுறுத்தல்

மண்டல பனைபொருள் பயிற்சி நிலையத்தில் பதநீா் விற்பனை

அரியாங்குப்பம் கோயில் திருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT