​ராஜஸ்தானில் பகுஜன் சமாஜ் எம்எல்ஏ-க்கள் காங்கிரஸில் இணைந்த விவகாரம் தொடர்பாக பதிலளிக்குமாறு பேரவைத் தலைவர், பேரவைச் செயலர் உள்ளிட்டோருக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.  
இந்தியா

காங்கிரஸில் இணைந்த பிஎஸ்பி எம்எல்ஏ-க்கள்: பேரவைத் தலைவர், எம்எல்ஏ-க்களுக்கு நோட்டீஸ்

​ராஜஸ்தானில் பகுஜன் சமாஜ் எம்எல்ஏ-க்கள் காங்கிரஸில் இணைந்த விவகாரம் தொடர்பாக பதிலளிக்குமாறு பேரவைத் தலைவர், பேரவைச் செயலர் உள்ளிட்டோருக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

DIN


ராஜஸ்தானில் பகுஜன் சமாஜ் எம்எல்ஏ-க்கள் காங்கிரஸில் இணைந்த விவகாரம் தொடர்பாக பதிலளிக்குமாறு பேரவைத் தலைவர், பேரவைச் செயலர் உள்ளிட்டோருக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

ராஜஸ்தானில் பகுஜன் சமாஜ் (பிஎஸ்பி) எம்எல்ஏ-க்கள் 6 பேர் கடந்தாண்டு தங்களை குழுவாக காங்கிரஸ் கட்சியில் இணைத்துக் கொண்டனர். இதை எதிர்த்து பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் பாஜக எம்எல்ஏ மதன் திலவர் சார்பில் ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் ஆகஸ்ட் 11-ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு பேரவைத் தலைவர், பேரவைச் செயலர் மற்றும் பகுஜன் சமாஜ் எம்எல்ஏ-க்கள் 6 பேருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

ராஜஸ்தானில் துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட், முதல்வர் அசோக் கெலாட் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏ-க்கள் 18 பேர் ஹரியாணாவில் விடுதியில் தங்கியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பெரும்பான்மையை நிரூபிக்க அசோக் கெலாட் பேரவையைக் கூட்டியுள்ளார். வரும் ஆகஸ்ட் 14-ம் தேதி சட்டப்பேரவை கூடுகிறது.

இந்த சூழலில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெங்களூரில் காரில் தனியாக பயணித்தால் வரி விதிப்பா?

பாகிஸ்தானில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு: 12 பேர் பலி

திருடப்பட்ட 6 லட்சம் கைப்பேசிகள் மீட்பு; லட்சக்கணக்கான குடும்பங்களின் டிஜிட்டல் பாதுகாப்பும் மீட்டெடுப்பு!

கரூர் பலி: செந்தில் பாலாஜி விளக்கம் சந்தேகத்தை எழுப்புகிறது; அண்ணாமலை

9 மாநிலங்களுக்கு ரூ. 4,645.60 கோடி புனரமைப்புத் திட்ட நிதி - உயர்மட்டக் குழு ஒப்புதல்

SCROLL FOR NEXT