இந்தியா

தெலங்கானாவில் அதிகரிக்கும் கரோனா: ஒரே நாளில் 1986 பேர் பாதிப்பு

DIN

தெலங்கானாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1986 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தெலங்கானாவில் கரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.கடந்த 24 மணி நேரத்தில் மாநிலம் முழுவதும் 1,986 பேர் காரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் காரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 62 ஆயிரத்து 703 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது 10 ஆயிரத்து 632 பேர் கரோனா பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தெலங்கானாவில் ஒரே நாளில் 816 பேர் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

மாநிலத்தில் கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 519 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 21 ஆயிரத்து 380 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை மாநிலம் முழுவதும் 4 லட்சத்து 37 ஆயிரத்து 582 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நந்தா தொழில்நுட்பக் கல்லூரியில் நூலகம் குறித்த தேசிய கருத்தரங்கு

கோ்மாளத்தில் பொதுக் கிணற்றை தூா்வாரிய மக்கள்

சென்னிமலை அருகே மணல் கடத்தல்: லாரி பறிமுதல்

கோபியில் இலவச கண் சிகிச்சை முகாம்

'சா்வாதிகாரத்துக்கு' எதிராக வாக்களிக்க வேண்டும்: சுனிதா கேஜரிவால் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT