முகப்பு
இந்தியா

வாரச் சந்தை, உணவகங்களை திறக்கும் திட்டங்களை நிராகரித்தார் தில்லி ஆளுநர் 

தேசியத் தலைநகர் தில்லியில் கரோனா தொற்றுப் பரவல் சற்று குறைந்திருக்கும் நிலையில், வாரச் சந்தைகள் மற்றும் உணவகங்களைத் திறக்கும் திட்டங்களை தில்லி ஆளுநர் நிராகரித்துள்ளார்.

Updated On : 31 ஜூலை, 2020 at 5:56 PM
வாரச் சந்தை, உணவகங்களை திறக்கும் திட்டங்களை நிராகரித்தார் தில்லி ஆளுநர்
பகிர்:


புது தில்லி: தேசியத் தலைநகர் தில்லியில் கரோனா தொற்றுப் பரவல் சற்று குறைந்திருக்கும் நிலையில், வாரச் சந்தைகள் மற்றும் உணவகங்களைத் திறக்கும் திட்டங்களை தில்லி ஆளுநர் நிராகரித்துள்ளார்.

முன்னதாக, மத்திய அரசின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி, தில்லியில் மூன்றாவது தளர்வுகளுடன் கூடிய பொது முடக்கத்தை அறிவிக்க தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் திட்டமிட்டிருந்தார்.

இந்த நிலையில், உணவகங்களை திறக்கலாம் மற்றும் வாரச் சந்தைகளுக்கு பரிசோதனை முறையில் அனுமதி அளிப்பது போன்ற திட்டங்களுக்கு அனுமதி கேட்டு ஆளுநர் அனில் பைஜாலுக்கு தில்லி அரசு பரிந்துரை செய்திருந்தது.

Advertisement

ஆனால், ஆளுநர் இந்த திட்டங்களை நிராகரித்திருப்பதாக தில்லி அரசு தற்போது தெரிவித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.