முகப்பு
இந்தியா

தாராவியில் புதிதாக 34 பேருக்கு கரோனா தொற்று

தாராவியில் புதிதாக 34 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:43 PM
பகிர்:


தாராவியில் புதிதாக 34 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரம், மும்பை மற்றும் தாராவி ஆகிய பகுதிகளில் கரோனா தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளானோர் பற்றிய சமீபத்திய தகவல்கள் வெளியாகியுள்ளன.

மகாராஷ்டிரம்:

மகாராஷ்டிரத்தில் புதிதாக 2,361 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 76 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து, அங்கு மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 70,013 ஆக உயர்ந்துள்ளது. மொத்தம் 2,362 பேர் பலியாகியுள்ளனர்.

மும்பை:

மும்பையில் புதிதாக 1,413 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 40 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து, அங்கு மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 40,877 ஆக உயர்ந்துள்ளது.

தாராவி:

ஆசியாவின் மிகப் பெரிய குடிசைப் பகுதியான மும்பை, தாராவியில் புதிதாக 34 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 1,805 ஆக உயர்ந்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →