முகப்பு
இந்தியா

பலாத்காரத்துக்கு உள்ளான சிறுமி 40 கி.மீ. தூரம் நடந்தே வீடு வந்து சேர்ந்த அவலம்

பலாத்காரத்துக்கு உள்ளான சிறுமியை மருத்துவப் பரிசோதனைக்காக அழைத்துச் சென்ற காவலர்கள், அவரை அங்கேயே விட்டுவிட்டுச் சென்றதால், சிறுமி 40 கி.மீ. நடந்தே வீடு வந்து சேர்ந்த சம்பவம் பிகாரில் நடந்தேறியுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:43 PM
பகிர்:


பாட்னா: பலாத்காரத்துக்கு உள்ளான சிறுமியை மருத்துவப் பரிசோதனைக்காக அழைத்துச் சென்ற காவலர்கள், அவரை அங்கேயே விட்டுவிட்டுச் சென்றதால், சிறுமி 40 கி.மீ. நடந்தே வீடு வந்து சேர்ந்த சம்பவம் பிகாரில் நடந்தேறியுள்ளது.

பிகார் மாநிலம் அராரியா மாவட்டத்தில் இந்த மோசமான சம்பவம் நடந்துள்ளது.

வீட்டில் தனியாக இருந்த 14 வயது சிறுமியை, ஃபிரோஸ் அன்சாரி என்பவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்த சம்பவம் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும், சிறுமியின் வீட்டுக்கு வந்து விசாரணை நடத்திய காவல்துறையினர், சிறுமியை மருத்துவப் பரிசோதனைக்காக காவல்துறை வாகனத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

சிறுமியை மருத்துவர்களிடம் விட்டுவிட்டு காவல்துறையினர் கிளம்பிவிட்டனர். மருத்துவப் பரிசோதனைகள் முடிந்து, பொது முடக்கத்தால் வாகன வசதியும் இல்லாமல், சுமார் 40 கி.மீ. தொலைவில் உள்ள வீட்டை நான்கு மணி நேரம் நடந்தே வந்து சேர்ந்துள்ளார் அந்தச் சிறுமி.

இந்த சம்பவம் குறித்து அறிந்த பிகார் மாநில மனித உரிமைகள் ஆணையம், காவல்துறையிடம் இருந்து அறிக்கை கேட்டுள்ளது. சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.