இந்தியா

ஒரு வாரத்துக்கு தில்லியின் அனைத்து எல்லைகளும் மூடல்: அரவிந்த் கேஜரிவால்

கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் ஒரு வாரத்துக்கு தில்லியின் அனைத்து எல்லைகளும் மூடி சீல் வைக்கப்படுவதாக முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.

DIN


புது தில்லி: கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் ஒரு வாரத்துக்கு தில்லியின் அனைத்து எல்லைகளும் மூடி சீல் வைக்கப்படுவதாக முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.

தில்லியில் தொடர்ந்து கரோனா அச்சுறுத்தல் அதிகரித்து வரும் நிலையில் இன்று காணொலி மூலம் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் இந்த அறிவிப்பை மேற்கொண்டார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது, தில்லியின் அனைத்து எல்லைப் பகுதிகளும் அடுத்த ஒரு வாரத்துக்கு மூடி சீல் வைக்கப்படும். அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிக் கொண்டு வரும் வாகனங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும்.

அதேபோல, அரசு அலுவலர்கள் தங்களது அடையாள அட்டையைக் காண்பித்து பயணத்தை மேற்கொள்ளலாம். பாஸ் பெற்றவர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள். 

ஒரு வாரம் கழித்து எல்லையைத் திறப்பது குறித்து மருத்துவ நிபுணர்களுடன் கலந்தாலோசனை நடத்தி, பொதுமக்களிடம் கருத்துக் கேட்டு முடிவு செய்யப்படும் என்று முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ. 50 கோடிக்கு விற்பனையான டிமான்டி காலனி - 3 உரிமங்கள்!

45 சவரன் நகையைக் கண்டெடுத்த தூய்மைப் பணியாளருக்கு ரூ. 1 லட்சம் பரிசுத்தொகை!

பிக் பாஸ் 9: வெளியேறும்போதுகூட திவ்யாவை புறக்கணித்த சான்ட்ரா!

ஓரிரு நாள்களில் அதிமுக கூட்டணியில் புதிதாக ஒரு கட்சி இணைகிறதா? - இபிஎஸ்

ராகுல் காந்தி நாளை கூடலூர் வருகை!

SCROLL FOR NEXT