கோப்புப்படம் 
இந்தியா

கரோனா: கேரளத்தில் 57, கர்நாடகத்தில் புதிதாக 187 பேருக்கு தொற்று

கேரளத்தில் இன்று (திங்கள்கிழமை) புதிதாக 57 பேருக்கும், கர்நாடகத்தில் புதிதாக 187 பேருக்கும் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

DIN


கேரளத்தில் இன்று (திங்கள்கிழமை) புதிதாக 57 பேருக்கும், கர்நாடகத்தில் புதிதாக 187 பேருக்கும் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கேரளம்:

கேரளத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளானோர் பற்றிய சமீபத்திய தகவல்களை அந்த மாநில முதல்வர் பினராயி விஜயன் செய்தியாளர்கள் சந்திப்பு மூலம் வெளியிட்டார்.

இதன்படி, கேரளத்தில் புதிதாக 57 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், 27 பேர் வெளிநாடுகளிலிருந்தும், 28 பேர் வெளிமாநிலங்களிலிருந்தும் வந்தவர்கள். இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 1,326 ஆக உயர்ந்துள்ளது. இன்று மேலும் ஒருவர் பலியானதைத் தொடர்ந்து மொத்தம் பலியானோரின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. இன்றைய தேதியில் 708 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 608 பேர் குணமடைந்துள்ளனர்.

கர்நாடகம்:

கர்நாடகத்தில் கரோனா தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளானோர் பற்றிய சமீபத்திய தகவல்களை அந்த மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.

இதன்படி, அந்த மாநிலத்தில் நேற்று மாலை 5 முதல் இன்று மாலை 5 மணி வரை புதிதாக 187 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அந்த மாநிலத்தில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 3,408 ஆக உயர்ந்துள்ளது. 2,026 பேர் சிகிச்சையில் உள்ளனர். பலி எண்ணிக்கை 52 ஆக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நிதி மோசடிகளைத் தடுக்க! 2 கோடி ஆதார் எண்கள் நீக்கம்!!

2030-ல் இந்தியாவில் காமன்வெல்த் போட்டிகள்!

துபையில்... பிரியதர்ஷினி சாட்டர்ஜி!

இரவு 10 மணி வரை 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

“இபிஎஸ்-க்கு கார் ஏற்பாடு செய்கிறேன்!” | முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் | DMK | EPS | ADMK

SCROLL FOR NEXT