இந்தியா

மத்திய அரசு புலம்பெயர் தொழிலாளர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும்: மம்தா பானர்ஜி

கரோனா பரவல் காரணமாக ஏற்படும் பொருளாதார நெருக்கடிகளைச் சமாளிக்க அமைப்புசாரா துறையில் உள்ளவர்கள் உள்பட ஒவ்வொரு புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ரூ.10 ஆயிரம்..

ANI

புது தில்லி: கரோனா பரவல் காரணமாக ஏற்படும் பொருளாதார நெருக்கடிகளைச் சமாளிக்க அமைப்புசாரா துறையில் உள்ளவர்கள் உள்பட ஒவ்வொரு புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் ரூ.10 ஆயிரம் நிதியுதவி வழங்குமாறு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி புதன்கிழமை மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார். 

தற்போதைய நிலையில் ஏற்பட்டுள்ள தொற்றுநோய் காரணமாக கற்பனைக்கு எட்டாத விகிதத்தில் மக்கள் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர். அமைப்புசாரா துறையில் உள்ளவர்கள் உள்பட புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு நிவாரணத் தொகையாக தலா ரூ.10 ஆயிரம் வழங்குமாறு மத்திய அரசிடம் நான் வேண்டுகோள் விடுக்கின்றேன். மேலும் பிரதமர் நிவாரண நிதியின் ஒருபகுதியை இதற்காகப் பயன்படுத்தலாம் என்றும் பானர்ஜி சுட்டுரையில் பதிவு செய்துள்ளார். 

முன்னதாக, கரோனாவுக்கு எதிரான போராட்டத்திற்கு ரூ.3,100 கோடியை மத்திய அரசு ஒதுக்கியது. இதில், ரூ.2 ஆயிரம் கோடி வெண்டிலேட்டர்கள் வாங்கவும், ஆயிரம் கோடி ரூபாய் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவவும் மற்றும் கரோனா வைரஸ் தடுப்பூசி வளர்ச்சிக்கு ரூ.100 கோடியை பயன்படுத்தவும் ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

10 கோடி பார்வைகளைப் பெற்ற கனிமா!

லாக்-அப் மரணம் அல்ல! கோவை காவல் நிலையத்தில் ஒருவர் மர்ம மரணம்! நடந்தது என்ன?

தொடர்ந்து 2-ம் நாளாக சரிவில் பங்குச் சந்தை!

மீண்டும் ரூ. 75,000 -ஐ கடந்தது தங்கம் விலை!

75 ஆயிரத்தைக் கடந்த தங்கம் விலை!

SCROLL FOR NEXT