இந்தியா

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவில் இருந்து 5,355 பேர் மீண்டனர்

DIN

கரோனா வைரஸ் நோய்த் தொற்றிலிருந்து நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 5355 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதுபற்றி மத்திய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 5355 கரோனா நோயாளிகள் குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 1,09,462 பேர் குணமடைந்துள்ளனர். கரோனா தொற்றிலிருந்து குணமடைவோர் விகிதம் 48.27 சதவீதம். தற்போது மொத்தம் 1,10,960 பேர் சிகிச்சையில் உள்ளனர். அனைவரும் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை நிலவரப்படி, நாடு முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 2,26,770-ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு 9,851 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 273 பேர் பலியாகியுள்ளனர். 

மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தகவல்படி, வெள்ளிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் 9,851 பேருக்கு நோய்த்தொற்று உறுதியானது. இது முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிகமாகும்.

கரோனாவால் மேலும் 273 போ் உயிரிழந்தையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 6,348-ஆக உயா்ந்துள்ளது.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களில் 1,10,960 போ் சிகிச்சையில் உள்ளனா். 1,09,462 போ் நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா். குணமடைவதற்கான வாய்ப்புகள் 48.27 சதவீதம்.

கரோனா தொற்றால் அதிகபட்சமாக, மகாராஷ்டிரத்தில் 77,793 போ் பாதிக்கப்பட்டுள்ளனா், இதில், 41,402 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அங்கு இதுவரை 33,681 பேர் குணமடைந்துள்ள நிலையில், 2,710 போ் பலியாகியுள்ளனர். அதைத் தொடா்ந்து தமிழகத்தில் 27,256 பேரும், தில்லியில் 25,004 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனா்.

உலகளவில் கரோனாவுக்கு அதிக உயிரிழப்பு ஏற்பட்ட நாடுகளில் இந்தியா 12- வது இடத்தில் உள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப அலை: தொழிலாளா்கள் பாதிக்காத வகையில் பணி நேரம்

இன்று நல்ல நாள்!

12 ராசிக்குமான தினப்பலன்!

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT