தில்லியில் கரோனா பாதிப்பு 26 ஆயிரத்தைத் தாண்டியது: 3 நாள்களில் ஆயிரம் பேர் அனுமதி
தேசிய தலைநகர் தில்லியில் கரோனா தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 26 ஆயிரத்தைக் கடந்துள்ளது. கடந்த மூன்று நாள்களில் மட்டும் சுமார்
தேசிய தலைநகர் தில்லியில் கரோனா தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 26 ஆயிரத்தைக் கடந்துள்ளது. கடந்த மூன்று நாள்களில் மட்டும் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நல்வாழ்வுத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தெரிவித்துள்ளார்.
தில்லியில் சனிக்கிழமை நிலவரப்படி கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 26,334 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகளின் எண்ணிக்கை 15,311 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 3 நாள்களில் மட்டும் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கரோனா நோயாளிகள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நாட்டில் கரோனா தொற்றுக்கு அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரம் உள்ளது. இதற்கு அடுத்தடுத்த இடங்களில் தமிழ்நாடு, தேசிய தலைநகர் தில்லி, குஜராத் உள்ளன.
இந்நிலையில், தேசிய தலைநகர் தில்லியில் தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 26 ஆயிரத்தை கடந்துள்ளது.
கரோனா நோயாளிகளுக்காக இதுவரை 8,500 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில் 45% படுக்கைகள் நிரம்பிவிட்டன.
இந்த நிலையில், அமைச்சர் ஜெயின் பேசுகையில், 14 நாள்களுக்கு ஒரு முறை தில்லியில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை இரட்டிப்பாகிறது. தற்போதிருக்கும் சூழ்நிலையில், மேற்கொண்டு படுக்கை வசதிகளை அதிகரிக்க வேண்டியது அவசியம் என்பது தெரிகிறது. அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கரோனா பாதித்து தீவிர அறிகுறிகள் இருப்பவர்கள் எல்என்ஜேபி, பிடிபி, ராஜீவ் காந்தி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளுக்குச் செல்லலாம்.
அதே சமயம், கரோனா பாதித்தவர்கள் அனைவருமே மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும் என்பது அவசியமல்ல, 80 முதல் 90 சதவீதம் பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய அவசயமில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.