முகப்பு
இந்தியா

உ.பி.யில் புலம்பெயர் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

குஜராத்திலிருந்து உத்தரப் பிரதேசத்திற்குத் திரும்பிய புலம்பெயர்ந்த தொழிலாளி மின்விசிறியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டதாக காவல்துறையினர் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:46 PM
பகிர்:

பண்டா: குஜராத்திலிருந்து உத்தரப் பிரதேசத்திற்குத் திரும்பிய புலம்பெயர்ந்த தொழிலாளி மின்விசிறியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டதாக காவல்துறையினர் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர். 

மோஹித் 19 வயதாக இளைஞர் சமீபத்தில் குஜராத்திலிருந்து அகமதாபாத்தில் உள்ள மாவ் கிராமத்திற்குத் திரும்பியிருந்தார். அங்கு அவர் பழங்களை விற்பனை செய்துவந்தார். 

இந்நிலையில், தான் தங்கியிருந்த வீட்டில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில் அறையில் தொங்கியபடி காணப்பட்டதாக பாபெரு வட்ட அலுவலர் ராஜீவ் சிங் தெரிவித்தார். 

தற்கொலைக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரேதப் பரிசோதனைக்குப் பின்னர் உடல் குடும்ப உறுப்பினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது என்றார்.

முழு கட்டுரையைப் படிக்க →