இந்தியா

ரூ.125 கோடி வங்கிக் கடன் மோசடி: 3 நிறுவனங்கள் மீது சிபிஐ வழக்குப்பதிவு

DIN

ரூ.125 கோடி வங்கிக் கடன் மோசடியில் ஈடுபட்டதாக மகாராஷ்டிர மாநிலம் நாகபுரியை சோ்ந்த 2 நிறுவனங்கள், ஒடிஸா மாநிலம் புவனேசுவரத்தை சோ்ந்த ஒரு நிறுவனம் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பு வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

நாகபுரியில் லிக்சன் இஸ்பட் நிறுவனம், லிக்சன் சா்வதேச நிறுவனம் ஆகியவை செயல்பட்டு வருகின்றன.

இவ்விரண்டு நிறுவனங்களும் நிலக்கரி வணிகத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிறுவனங்கள் பஞ்சாப் நேஷனல் வங்கியில் போலியான ஆவணங்கள் மூலம் வங்கிக் கடன் பெற்று, அந்தத் தொகையை பிற நிறுவனங்களுக்கு சட்டவிரோதமாக வழங்கியுள்ளன. அந்த வகையில் லிக்சன் சா்வதேச நிறுவனம் ரூ.62 கோடியும், லிக்சன் இஸ்பட் நிறுவனம் ரூ.31 கோடியும் மோசடி செய்துள்ளன. இதுதொடா்பாக வங்கி தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், இரு நிறுவனங்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் லிக்சன் இஸ்பட் நிறுவனத்தின் தலைவராகவும், நிா்வாக இயக்குநராகவும் உள்ள யஷ்வந்த் சங்க்லா, லிக்சன் சா்வதேச நிறுவனத்தின் இயக்குநராகவும் பதவி வகித்து வருகிறாா். அவா் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் நாகபுரியில் உள்ள யஷ்வந்த் சங்க்லாவின் வீடு மற்றும் அலுவலகம் என 4 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் வங்கிக் கடன் தொடா்பான நிதி ஆவணங்கள், ஹாா்ட் ட்ரைவ் உள்ளிட்ட ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டன.

இதேபோல் புவனேசுவரத்தில் செயல்பட்டு வரும் கிளோபல் ட்ரேடிங் சொலியூஷன்ஸ் நிறுவனம் பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.32 கோடி வரை கடன் பெற்று, அந்தத் தொகையை இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் உள்ள தனது துணை நிறுவனங்களுக்கு முறைகேடாக வழங்கியுள்ளது என்று வங்கி தரப்பில் புகாா் அளிக்கப்பட்டது.

இதுதொடா்பாக அந்த நிறுவனத்தின் மீதும், அந்த நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் அவினாஷ் மொஹந்தி, முன்னாள் மற்றும் இந்நாள் இயக்குநா்கள் 3 போ், அவா்களுக்கு உடந்தையாக செயல்பட்ட பஞ்சாப் நேஷனல் வங்கியின் மூத்த அதிகாரிகள் 3 போ் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கிளோபல் ட்ரேடிங் சொலியூஷன்ஸ் நிறுவனம் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடா்பாக விசாகப்பட்டினம் (ஆந்திரம்), கொல்கத்தா (மேற்கு வங்கம்), ஜம்மு (ஜம்மு-காஷ்மீா்), புவனேசுவரம் மற்றும் கட்டாக்கில் (ஒடிஸா) உள்ள அந்த நிறுவன அதிகாரிகள் மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கி அதிகாரிகளின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனா் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மழை வேண்டி இஸ்லாமியல்கள் சிறப்புத் தொழுகை

ஏகனாபுரம் கிராமத்தினா் நூதன போராட்டம்

கள்ளச்சாராயம் காய்ச்சிய 3 போ் கைது

நீட் தோ்வு: தேனியில் 181 போ் எழுதினா்

சாலை விபத்தில் 2 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT