முகப்பு
இந்தியா

கார்ட்டூன் பார்ப்பதை பெற்றோர் கண்டித்ததால் புணே சிறுவன் தற்கொலை

தொலைக்காட்சி முன் பல மணி நேரம் அமர்ந்து கார்ட்டூன் நிகழ்ச்சிகளைப் பார்த்துக் கொண்டிருப்பதற்கு பெற்றோர் கண்டிப்பு தெரிவித்ததால் 13 வயது சிறுவன் தற்கொலை செய்து கொண்டுள்ளான்.

Updated On : 12 ஜூன், 2020 at 2:35 PM
பகிர்:


புணே: தொலைக்காட்சி முன் பல மணி நேரம் அமர்ந்து கார்ட்டூன் நிகழ்ச்சிகளைப் பார்த்துக் கொண்டிருப்பதற்கு பெற்றோர் கண்டிப்பு தெரிவித்ததால் 13 வயது சிறுவன் தற்கொலை செய்து கொண்டுள்ளான்.

புணே மாவட்டம் பிப்வேவாடி பகுதியில், வசித்து வந்த பள்ளிச் சிறுவன் நாள் முழுக்க கார்ட்டூன் பார்த்துக் கொண்டிருந்துள்ளார். கடந்த புதன்கிழமை சிறுவனின் தாய் இதனைக் கண்டித்துள்ளார். சிறுவனின் சகோதரி தொலைக்காட்சியை அணைத்துவிட்டுள்ளார்.

இதனால் அதிருப்தி அடைந்த சிறுவன், மாடியில் உள்ள அறைக்குச் சென்று மின் விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளான்.

Advertisement

பல மணி நேரம் ஆகியும் சிறுவன் உணவருந்த கீழே வராததால், சகோதரி மாடிக்குச் சென்று பார்த்த போதுதான் சம்பவம் பற்றி குடும்பத்தாருக்குத் தெரிய வந்தது.

உடனடியாக சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது, அவன் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். 

இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், உடலை உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.