முகப்பு
இந்தியா

வங்கிக்குள் நுழையும் போது முகக்கவசத்தை அகற்ற வேண்டும்: மத்தியப் பிரதேச அரசு

வங்கிகள், நகைக்கடை, நகைக் கடன் வழங்கும் நிதி நிறுவனங்களுக்குள் நுழையும் போது, நுழைவாயிலில் 30 நொடிகளுக்கு முகக்கவசம் அணிந்திருக்கக் கூடாது என்று மத்தியப் பிரதேச அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Updated On : 12 ஜூன், 2020 at 2:34 PM
பகிர்:


போபால்: வங்கிகள், நகைக்கடை, நகைக் கடன் வழங்கும் நிதி நிறுவனங்களுக்குள் நுழையும் போது, நுழைவாயிலில் 30 நொடிகளுக்கு முகக்கவசம் அணிந்திருக்கக் கூடாது என்று மத்தியப் பிரதேச அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது குறித்த சுற்றறிக்கையை மாநிலத்தின் காவல்துறை கூடுதல் இயக்குநர் கைலாஷ் மக்வனா வெளியிட்டுள்ளார். அதில், முகமூடிக் கொள்ளையர்களிடம் இருந்து நிதி நிறுவனங்களைப் பாதுகாக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

அதே சமயம், அந்தந்த காவல்நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் இயங்கும் நிதி நிறுவனங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதா, அவை முறையாக செயல்படுகிறதா, தரமானதா என்பதை சோதிக்குமாறு காவல்நிலையங்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertisement

வங்கிகள், நிதி நிறுவனங்கள், நகைக் கடன் அளிக்கும் நிதி நிறுவனங்களுக்குள் பொதுமக்கள் நுழையும் போது, தாங்களாகவே, சிசிடிவி இருக்கம் நுழைவாயிலை அடையும் போது முகக்கவசத்தை கழற்றிவிட்டு, முகத்தை அடையாளம் தெரியும் வகையில் நிற்பதை மாவட்ட ஆட்சியர்களும் உறுதி செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

போபால் உள்ளிட்டப் பகுதிகளில் முகக்கவசம் அணிவதை வசதியாக வைத்துக் கொண்டு சில முகமூடிக் கொள்ளைச் சம்பவங்கள் நடந்திருப்பதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.