இந்தியா

கேரளத்தில் புதிதாக 85 பேருக்கு கரோனா தொற்று

DIN


கேரளத்தில் இன்று (சனிக்கிழமை) புதிதாக 85 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுபற்றி அந்த மாநில சுகாதாரத் துறை அமைச்சர் கே.கே. ஷைலஜா தெரிவித்ததாவது:

"கேரளத்தில் புதிதாக 85 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 1,342 ஆக உயர்ந்துள்ளது. புதிதாக தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட 85 பேரில் 53 பேர் வெளிநாடுகளிலிருந்தும், 18 பேர் வெளிமாநிலங்களிலிருந்தும் வந்தவர்கள். 10 பேர் கேரளத்தில் உள்ளவர்கள். 4 பேர் மருத்துவ ஊழியர்கள்.

இன்றைய நிலவரப்படி 1,045 பேர் குணமடைந்துள்ளனர். வீடுகளிலும், கண்காணிப்பு மையங்களிலும் 2,35,418 பேர் கண்காணிப்பில் உள்ளனர். 1,989 பேர் மருத்துவமனையில் உள்ளனர்."

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கட்கபுரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

திருச்செந்தூரில் மே 22இல் வைகாசி விசாகம்

உடல் பருமன் குறைப்பு சிகிச்சையில் இளைஞா் உயிரிழப்பு: மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க முதல்வரிடம் வலியுறுத்தல்

மண்டல பனைபொருள் பயிற்சி நிலையத்தில் பதநீா் விற்பனை

அரியாங்குப்பம் கோயில் திருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT