இந்தியா

மகாராஷ்டிரத்தில் புதிதாக 3,427 பேருக்கு கரோனா

மகாராஷ்டிரத்தில் இன்று (சனிக்கிழமை) புதிதாக 3,427 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

DIN


மகாராஷ்டிரத்தில் இன்று (சனிக்கிழமை) புதிதாக 3,427 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் அதிகம் பாதிப்புக்குள்ளாகியுள்ள மாநிலம் மகாராஷ்டிரம். அந்த மாநிலத்தில் மட்டும் கரோனா பாதிப்பு 1 லட்சத்தைத் தாண்டியுள்ளது. இந்த நிலையில், புதிதாக பாதிப்புக்குள்ளானோர், பலியானோர் உள்ளிட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இதன்படி, அங்கு புதிதாக 3,427 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 113 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 1,04,568 ஆக உயர்ந்துள்ளது. மொத்தம் பலி 3,830 ஆக உயர்ந்துள்ளது.

அதேசமயம், 1,550 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 49,346 பேர் குணமடைந்துள்ளனர். 

இன்றைய தேதியில் மொத்தம் 51,379 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கடந்த 12 நாள்களாக கரோனா பாதிப்பு 3 ஆயிரத்தைத் தாண்டியும், கரோனா பலி 100-ஐத் தாண்டியும் பதிவாகி வருகிறது.

மும்பை:

மும்பையில் புதிதாக 1,380 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 56,831 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 69 பேர் புதிதாக பலியானதைத் தொடர்ந்து, மொத்தம் பலியானோர் எண்ணிக்கை 2,113 ஆக உயர்ந்துள்ளது.

தாராவி:

தாராவியில் புதிதாக 17 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 2,030 ஆக உயர்ந்துள்ளது. 77 பேர் பலியாகியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாதிக்கப் பிறந்தவர்கள் தனுசு ராசிக்காரர்கள்!

புதிய சீரியலில் நடிக்கும் பாக்கியலட்சுமி சுசித்ரா!

இங்கிலாந்தை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா த்ரில் வெற்றி; டெஸ்ட் தொடர் சமன்!

அடுத்த 4 நாள்களுக்கு எங்கெல்லாம் கனமழை பெய்யும்?

நண்பர்களைத் தவிர்த்து... குடும்பத்துடன் பிறந்தநாள் கொண்டாடிய நடிகை!

SCROLL FOR NEXT