முகப்பு
இந்தியா

குஜராத் மற்றும் ஜம்மு காஷ்மீரில் நிலநடுக்கம்!

குஜராத் மற்றும் ஜம்மு காஷ்மீரில் ஞாயிறு இரவு சிறிய அளவில்  நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:47 PM
கோப்புப்படம்
பகிர்:

புது தில்லி: குஜராத் மற்றும் ஜம்மு காஷ்மீரில் ஞாயிறு இரவு சிறிய அளவில்  நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தேசிய புவியியல் மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

குஜராத் மாநிலம் ராஜ்கோட் பகுதியின் வடமேற்கே 122 கி.மீ தொலைவில் ஞாயிறு மாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோளில் 5.8 ஆக பதிவாகியுள்ளது.

அதேபோல ஜம்மு – காஷ்மீர் பிரதேசத்தின் காத்ரா பகுதியின் கிழக்கே 90 கி.மீ தொலைவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த  நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 3.0 ஆக பதிவாகியுள்ளது.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்து தகவல்கள் வெளியாகவில்லை.

முழு கட்டுரையைப் படிக்க →