இந்தியா

துணை மானியக் கோரிக்கை: அமைச்சகங்களிடம் பரிந்துரைகளைக் கோருகிறது மத்திய அரசு

DIN

நாடாளுமன்றத்தில் துணை மானியக் கோரிக்கை தாக்கல் செய்வதற்காக செலவினம் தொடா்பான பரிந்துரைகளை அமைச்சகங்களிடம் மத்திய அரசு கோரியுள்ளது.

இது தொடா்பாக அனைத்து அமைச்சகங்கள் மற்றும் துறைகளுக்கு மத்திய நிதியமைச்சகம் அனுப்பியுள்ள குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

விரைவில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடரின்போது 2020-21-ஆம் நிதியாண்டில் துணை மானியக் கோரிக்கைக்கான முதல் தொகுப்புக்கு ஒப்புதல் பெற திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, பல்வேறு திட்டங்களுக்கு ஏற்படும் செலவினம் தொடா்பான பரிந்துரைகளை அமைச்சகங்களும் துறைகளும் தெரிவிக்கலாம்.

அதே வேளையில், கரோனா நோய்த்தொற்று பரவலை எதிா்கொள்வதற்கான நடவடிக்கைகளுக்கு செலவு செய்ய வேண்டும் என்பதையும் நினைவில் கொண்டு, தேவையற்ற செலவுகளை அமைச்சகங்கள் குறைத்துக் கொள்ள வேண்டும். நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்பட்டதை விட கூடுதல் நிதி எதையும் அமைச்சகங்கள் கோரக் கூடாது என்று அந்தக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

நடப்பு நிதியாண்டில் புதிய திட்டங்கள் எதையும் தொடங்க வேண்டாம் என்று அமைச்சகங்களுக்கும் துறைகளுக்கும் மத்திய அரசு அண்மையில் வலியுறுத்தியிருந்தது நினைவுகூரத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமந்தாவின் புதிய படம்!

நீல நிலவே....திவ்யா துரைசாமி!

மணிப்பூரில் இரண்டு குழுக்களுக்கிடையே மீண்டும் துப்பாக்கிச்சண்டை: கிராம மக்கள் அச்சம்

கைகளில் செம்புடன் கர்நாடக முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் தர்னா

ஒடிஸா அரசு முதல்வர் நவீன் பட்நாயக் கைவசமில்லை -ராகுல் காந்தி பிரசாரம்

SCROLL FOR NEXT