இந்தியா

லடாக்கில் மரணமடைந்த ராணுவ அதிகாரி குடும்பத்திற்கு ரூ 5 கோடி நிதி: தெலங்கானா அரசு உத்தரவு

DIN

ஹைதராபாத்: லடாக்கில் மரணமடைந்த ராணுவ அதிகாரி சந்தோஷ் பாபு குடும்பத்திற்கு ரூ 5 கோடி நிதி வழங்குவதாக தெலங்கானா அரசு அறிவித்துள்ளது.

லடாக்கில் சீன ராணுவத்துடன் ஏற்பட்ட சண்டையின் காரணமாக  ராணுவ அதிகாரி சந்தோஷ் பாபு, தமிழகத்தைச் சேர்ந்த ஹவில்தார் பழனி உட்பட 20 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். அவர்களது குடும்பத்தாருக்கு மாநில அரசுகள் பல்வேறு உதவிகளை அறிவித்துள்ளன.

இந்நிலையில் லடாக்கில் மரணமடைந்த ராணுவ அதிகாரி சந்தோஷ் பாபு குடும்பத்திற்கு ரூ 5 கோடி நிதி வழங்குவதாக தெலங்கானா அரசு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக அம்மாநில அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, ‘லடாக்கில் சீன ராணுவ தாக்குதலில் வீரமரணமடைந்த ராணுவ அதிகாரி சந்தோஷ் பாபு குடும்பத்திற்கு ரூ.5 கோடி நிதி வழங்கப்படும் என்றும், அவரது குடும்பத்திற்கு ஒரு வீடு, அவரது மனைவிக்கு குரூப்-1 அரசுப் பணி தரவும் தெலங்கானா அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதேநேரம் எல்லையில் வீரமரணமடைந்த மற்ற 19 வீரர்களின் குடும்பத்திற்கும் தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்றும் அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கத்திரி வெயில்: 17 இடங்களில் சதம்: 6 நாள்கள் மழைக்கும் வாய்ப்பு

கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: ஹரியாணா நீதிமன்றம் தீா்ப்பு

வேளாண் கல்லூரியில் குரூப் 1 தோ்வுக்கான வழிகாட்டல்

இணையவழி பயங்கரவாத ஆள்சோ்ப்பு சா்வதேச பாதுகாப்புக்கு முக்கிய சவால்: சிபிஐ இயக்குநா்

மும்பை சிட்டி எஃப்சி சாம்பியன்

SCROLL FOR NEXT