இந்தியா

உ.பி.: அரசு குழந்தைகள் காப்பகத்தில் 57 சிறுமிகளுக்கு கரோனா; அதில் 5 பேர் கர்ப்பம்

PTI


கான்பூர்: உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் இயங்கி வரும் அரசு குழந்தைகள் காப்பத்தில் 57 சிறுமிகளுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில், 5 சிறுமிகள் கர்ப்பமாக இருப்பது தெரிய வந்துள்ளது.

இவர்கள் இல்லாமல் கரோனா பாதிப்பில்லாத மேலும் இரண்டு சிறுமிகளும் கர்ப்பமாக இருப்பது பரிசோதனையில் தெரிய வந்துள்ளதாக மாவட்ட நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார்.

கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கும் ஐந்து சிறுமிகளும், போக்சோ சட்டத்தின் படி ஆக்ரா, எட்டா, கன்னௌஜ், பிரோஸாபாத், கான்பூர் ஆகிய பகுதிகளில் உள்ள குழந்தைகள் நல வாரியத்தால் பரிந்துரைக்கப்பட்டு இங்கு அனுப்பப்பட்டவர்கள். இவர்கள் இல்லாமல், மேலும் இரண்டு சிறுமிகளும் கர்ப்பமாக இருக்கிறார்கள். அவர்களுக்கு கரோனா பாதிப்பு இல்லை.

இவர்கள் ஏழு பேருமே, அரசு காப்பகத்துக்கு வரும் போதே கர்ப்பமாக இருந்ததாக கான்பூர் மாவட்ட நீதிபதி பிரம்ம தேவ் ராம் திவாரி தெரிவித்துள்ளார்.

இந்த ஐந்து சிறுமிகளில் இரண்டு பேர் எல்எல்ஆர் மருத்துவமனையிலும், மற்ற மூன்று சிறுமிகள் தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சியாமளாதேவி அம்மன் கோயில் கட்டுமானப் பணிகள் தீவிரம்

அா்ஜுனன் தபசு மரம் ஏறும் விழா

கேரளம்: கடும் வெயிலால் இருவா் உயிரிழப்பு

கோடை வெப்பத்தை சமாளிக்க நடவடிக்கைகள்: ஆரம்ப சுகாதார நிலையங்களில் மாநகராட்சி ஆணையா் ஆய்வு

இறுதிக்கு வந்தது மோகன் பகான்

SCROLL FOR NEXT