கேரளத்தில் பிறந்து 54 நாள்களே ஆன குழந்தையை, குடிபோதையில் தந்தை தூக்கி எறிந்ததால் குழந்தை உயிருக்கு போராடும் நிலையில் உள்ளது.
கேரளத்தைச் சேர்ந்த ஷைஜு தாமஸ்(40) கட்டிலில் இருந்து கீழே விழுந்துவிட்டதாக தனது குழந்தையை மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். குழந்தைக்கு பலத்த அடி ஏற்பட்டிருந்ததை கவனித்த மருத்துவர்கள் சந்தேகித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து போலீஸார் விசாரித்ததில், குடிபோதையில் தாமஸ் தனது குழந்தையை தூக்கி எறிந்தது தெரிய வந்தது. இதையடுத்து, போலீஸார் தாமஸை கைது செய்தனர். அவர் 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் உள்ளார்.
கேரளம் எர்ணாகுளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் குழந்தை உயிருக்குப் போராடும் நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.