இந்தியா

ஜூன் 24 வரை 75 லட்சத்துக்கும் மேற்பட்ட கரோனா பரிசோதனைகள்: ஐ.சி.எம்.ஆர் தகவல்

நாடு முழுவதும் ஜூன் 24-ம் தேதி வரை 75 லட்சத்துக்கும் மேற்பட்ட கரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) தெரிவித்துள்ளது. 

ANI

புது தில்லி: நாடு முழுவதும் ஜூன் 24-ம் தேதி வரை 75 லட்சத்துக்கும் மேற்பட்ட கரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) தெரிவித்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் 2,07,871 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், கரோனா பரவத் தொடங்கியதிலிருந்து ஜூன் 24 வரை மொத்தம் 75,60,782 பேருக்கு கரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது என்றும் ஐசிஎம்ஆர் கூறியுள்ளது.

இதுவரை, நாடு முழுவதும் உள்ள மொத்தம் 1000 ஆய்வகங்களில், 730 அரசு ஆய்வகங்கள் மற்றும் 270 தனியார் ஆய்வகங்கள் உள்படத் தொற்றுநோய்க்கான பரிசோதனையை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும், பொது மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு கரோனா பரிசோதனைக்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்க ஐ.சி.எம்.ஆர் அறிவுறுத்தியுள்ளது. ராபிட் ஆன்டிஜென் சோதனையின் மூலம் பரிசோதனையைத் தொடங்க அனைத்து ஆய்வகங்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு ஐ.சி.எம்.ஆர் பரிந்துரைத்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் 16,922 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மொத்த பாதிப்பு 4,73,105ஐ எட்டியுள்ளது. ஒரே நாளிலி 418 பேரி பலியாகியுள்ள நிலையில் மொத் உயிரிழப்பு 14,894 ஆக உயர்ந்துள்ளது என்று மத்திய த்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மருதம் எல்லையம்மன் கோயில் தோ்த் திருவிழா

முனைவா் வசந்திதேவி மறைவுக்கு அஞ்சலி

தஞ்சையில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டம் தொடக்கம்

வாலாஜாபாத்தில் 195 ஆண்டுகள் பழைமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சுற்றுலா பேருந்து விபத்து: 6 போ் காயம்

SCROLL FOR NEXT