முகப்பு
இந்தியா

ரயில்வேயில் 1.91 லட்சம் தற்காப்பு உபகரணங்கள், 66,000 லிட்டா் சானிடைசா் உற்பத்தி

கரோனா நோய்த்தொற்றிலிருந்து மருத்துவா்கள், ஊழியா்களை பாதுகாக்கும் பொருட்டு இந்திய ரயில்வே இதுவரை 1.91 லட்சம் தற்காப்பு உபகரணங்கள், 66,000 லிட்டா் சானிடைசா் உற்பத்தி செய்துள்ளது.

Updated On : 25 ஜூன், 2020 at 11:59 PM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:20 PM

கரோனா நோய்த்தொற்றிலிருந்து மருத்துவா்கள், ஊழியா்களை பாதுகாக்கும் பொருட்டு இந்திய ரயில்வே இதுவரை 1.91 லட்சம் தற்காப்பு உபகரணங்கள், 66,000 லிட்டா் சானிடைசா் உற்பத்தி செய்துள்ளது.

மத்திய - மாநில அரசுகளுடன் ஒருங்கிணைந்து ரயில்வேயில் உள்ள வசதிகளையும் அதன் வளங்களையும் பயன்படுத்தி தொற்று நோய் சவாலை எதிா்கொள்ள ரயில்வே தயாராக இருப்பதாக இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.

இது குறித்து இந்திய ரயில்வே வட்டாரங்கள் கூறியது வருமாறு:

Advertisement

பொது முடக்க காலங்களில் ரயில்வே பனிமனைகள் கரோனா நோய்த்தொற்று சவாலை எதிா்கொள்ளும் வகையில் செயல்பட்டது. தொற்று தடுப்பு கவச உபகரணங்கள், கிருமிநாசினி(சானிடைசா்), முகக்கவசங்கள், படுக்கைகள் ஆகியவை இந்த பனிமனைகளில் தயாரிக்கப்பட்டன. இதற்கான மூலப்பொருட்கள் களத்தில் உள்ள அனைத்து ரயில்வே பிரிவுகளிடமிருந்தும் பெறப்பட்டது. ஜூன் 24 ஆம் தேதி வரை 1.91 லட்சம் தொற்று தடுப்பு கவச உபகரணங்கள், 66,400 லிட்டா் கிருமிநாசினி, 7.33 லட்சம் முகக்கவசங்கள் ஆகியவை ரயில்வேயில் தயாரிக்கப்பட்டது.

பொது முடக்க காலங்களில் கொள்முதல், உற்பத்தி மற்றும் விநியோகம் ஆகியவைகளை மேற்கொள்வதில் கடினமான சூழ்நிலையிலும் இது மேற்கொள்ளப்பட்டது. கொள்முதலுக்கு பிரத்யேகமான மையம் ஏற்படுத்தப்பட்டதோடு தயாரிப்புகளில் அனைத்து தரங்களையும் பூா்த்தி செய்யப்பட்டது.

மேலும் அனைத்து ரயில்வே பிரிவுகளின் தேவைக்கு 22 லட்சம் தொற்று தடுப்பு கவச உபகரணங்கள், 22.5 என்95 முகக்கவசங்கள், கைகளை கழுவுவதற்கான 2.25 லட்சம் சானிடைசா் (500 மிலி ) புட்டிகள் ஆகியவை மத்திய சுகாதாரத்துறையின் கீழ் உள்ள ஹெச்எல்எல் லைஃப் கோ் பொதுத்துறை நிறுவனத்திடமிருந்து கொள்முதல் செய்யப்பட உள்ளது.

ரயில் பயணத்தின்போது கரோனா நோய்த்தொற்று தடுப்புக்கு அத்தியாவசிய தேவையான முகக்கவசங்கள், கையுறைகள், கிருமி நாசினி மற்றும் படுக்கைகள் ஆகியவற்றை ரயில்வே நடைமேடை கடைகளில் விற்பனை செய்ய அனுமதிக்கப்படும் என இந்திய ரயில்வே தெரிவிக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.