கோப்புப்படம் 
இந்தியா

கேரளத்தில் தொடர்ந்து 10-வது நாளாக 100-க்கும் மேற்பட்டோருக்கு கரோனா

​கேரளத்தில் தொடர்ந்து 10-வது நாளாக இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

DIN


கேரளத்தில் தொடர்ந்து 10-வது நாளாக இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

கேரளத்தில் கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தகவலை அந்த மாநில சுகாதாரத் துறை அமைச்சர் கே.கே. ஷைலஜா வெளியிட்டார். இதன்படி அங்கு புதிதாக 118 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அங்கு சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 2,015 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,150 ஆக உள்ளது.

இன்றைக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்ட 118 பேரில் 68 பேர் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள், 36 பேர் வெளிமாநிலங்களிலிருந்து வந்தவர்கள். 14 பேர் கேரளத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மருத்துவமனையில் உள்ள 2,611 பேர் உள்பட 1,75,734 பேர் வீட்டுக் கண்காணிப்பு மற்றும் கரோனா மையத்தில் உள்ளனர். இன்றைக்கு புதிதாக 13 ஹாட்ஸ்பாட்கள் சேர்க்கப்பட்டதைத் தொடர்ந்து, கேரளத்திலுள்ள மொத்த ஹாட்ஸ்பாட்கள் 124 ஆக உயர்ந்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிப்ரவரி மாதப் பலன்கள் - மீனம்

பிப்ரவரி மாதப் பலன்கள் - கும்பம்

பிப்ரவரி மாதப் பலன்கள் - மகரம்

பிப்ரவரி மாதப் பலன்கள் - தனுசு

ரஷியாவில் அதிசயம்..! ஒரே நேரத்தில் தோன்றிய 4 நிலவுகள்!

SCROLL FOR NEXT