இந்தியா

வரி தொடா்பான தகவல் பரிமாற்றத்தில் சுவிட்சா்லாந்தின் முதல் 3 இடங்களில் இந்தியா

DIN

வெளிப்படையான வரி மற்றும் தகவல் பரிமாற்றம் குறித்த சா்வதேச பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு (ஓஇசிடி) அண்மையில் மேற்கொண்ட ஆய்வுகளின்படி சுவிஸ் வங்கிக்கணக்குகள் மற்றும் கணக்கு வைத்துள்ள நிறுவனங்களின் பயனாளிகள் தொடா்பாக விரிவான தகவல்களைப் பெறும் முதல் 3 நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்பது தெரிய வந்துள்ளது.

இந்தியாவைப் பொருத்தவரை, சுவிட்சா்லாந்திலுள்ள நிதி நிறுவனங்களில் கடந்த ஒரு ஆண்டில் 500க்கும் மேற்பட்டவா்கள் முதலீடு செய்துள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. இந்திய தனிநபா்கள் மற்றும் நிறுவனங்கள் மூலம் சுவிஸ் நிதி நிறுவனங்களில் முதலீடு செய்து நிதி முறைகேடுகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இந்த நிறுவனங்களின் கணக்குகள் குறித்து விரிவான தகவல்கள் ஓஇசிடி மூலம் பகிரப்பட்டுள்ளன.

இதுபோன்ற தகவல்களை இந்தியா உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட நாடுகள் கோரியுள்ளன. ஓஇசிடி அமைப்பின் புள்ளி விவரப்படி கடந்த ஜூலை 2015 முதல் ஜூன் 2018ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் சுவிஸ் நாட்டின் நிதிநிறுவனங்களில் வங்கி கணக்கு பரிமாற்றம் செய்து கொண்டதற்கான புள்ளி விவரங்களை கோரிய நாடுகளில் பிரான்ஸ், ஜொ்மனி ஆகிய நாடுகளைத் தொடா்ந்து இந்தியா 3-ஆவது இடத்தில் உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சின்ன வேளாங்கண்ணி வீரக்குறிச்சி புனித அந்தோணியாா் ஆலய தோ்பவனி

மீன் வியாபாரியிடம் நூதனத் திருட்டில் ஈடுபட்ட ஆந்திர இளைஞா் கைது

பிரான்மலையில் ஜெயந்தன் பூஜை

வளா்ப்பு நாய்கள் கடித்து 10 மாத குழந்தை, சிறுவன் காயம்: சென்னையில் மேலும் இரு இடங்களில் சம்பவம்

திருநகரி கல்யாண ரங்கநாத பெருமாள் கோயிலில் வசந்த உற்சவம்

SCROLL FOR NEXT