இந்தியா

சக பெண் ஊழியரைத் தாக்கிய ஹோட்டல் துணை மேலாளர்; வைரலாகும் சிசிடிவி காட்சி

DIN

ஆந்திர சுற்றுலாத் துறை கட்டுப்பாட்டில் உள்ள ஹோட்டலில் பணிபுரியும் பெண் ஊழியரை துணை மேலாளர் கடுமையாகத் தாக்கியுள்ள விடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

நெல்லூரில் உள்ள ஹோட்டல் ஒன்று ஆந்திர சுற்றுலாத் துறை கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. இதில், துணை மேலாளராக பணிபுரிபவர் பாஸ்கர். கடந்த ஜூன் 27 அன்று இவருக்கும், ஹோட்டலில் பணிபுரியும் மூத்த பெண் ஊழியர் ஒருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் பாஸ்கர் அந்த பெண்ணின் தலைமுடியை பிடித்து இழுத்து அடித்துள்ளார். சக ஊழியர் ஒருவர் அவரைத் தடுக்க முயற்சித்தும், அவர் தொடர்ந்து அருகில் உள்ள கட்டையை எடுத்து பெண்ணைத் தாக்கியுள்ளார்.

முன்னதாக, அந்த பெண்ணிடம் பேசவந்தபோது, பாஸ்கர் முகக்கவசம் அணிந்திருக்கவில்லை. இதுகுறித்து அந்த பெண் கேட்டதற்காக, பாஸ்கர் அடித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த சிசிடிவி விடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அன்றைய தினமே பிற்பகல் அந்த பெண், நெல்லூர்-4 டவுன் காவல் நிலையத்தில் பாஸ்கருக்கு எதிராக புகார் அளித்தார். இதையடுத்து பாஸ்கரை கைது செய்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருவதாக துணை காவல் ஆய்வாளர் வேணுகோபால் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT