முகப்பு
இந்தியா

சிவ போஜன் திட்டத்தால் ஒரு கோடிக்கும் அதிகமானோர் பயனடைந்தனர்: உத்தவ் தாக்கரே

மகாராஷ்டிரத்தில் சிவ போஜன் திட்டத்தால் ஒரு கோடிக்கும் அதிகமானோர் பயனடைந்துள்ளனர் என்று அந்த மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:52 PM
பகிர்:


மகாராஷ்டிரத்தில் சிவ போஜன் திட்டத்தால் ஒரு கோடிக்கும் அதிகமானோர் பயனடைந்துள்ளனர் என்று அந்த மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிர மாநிலத்தில் ரூ.10க்கு மதிய உணவு(தாலி) வழங்கும் திட்டம் சமீபத்தில் தொடங்கப்பட்டது. இந்நிலையில் கரோனா தொற்று காரணமாக பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டதன் காரணமாக, ரூ.10-க்கு வழங்கப்பட்ட உணவு ரூ.5 ஆகக் குறைத்து அந்த மாநில அரசு அறிவித்தது. 

இதையடுத்து, மாநிலம் முழுவதும் தற்போது 848 சிவ போஜன் மையங்கள் செயல்பட்டு வருகின்றன. மகாராஷ்டிர அரசாங்கத்தின் லட்சியத் திட்டமான சிவ போஜன் தாலி கடந்த ஜனவரி 26-ம் தேதி துவங்கியதிலிருந்து இதுவரை ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் பயனடைந்துள்ளதாக முதல்வர் அலுவலகம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.