முகப்பு
இந்தியா

ஆற்றில் புனித நீராட சென்ற தலைமை நீதிபதி நூலிழையில் உயிர்தப்பினார்

உத்தரகண்டில் ஆற்றில் புனித நீராட சென்ற உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி நூலிழையில் உயிர்தப்பினார். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:02 PM
பகிர்:

உத்தரகண்டில் ஆற்றில் புனித நீராட சென்ற உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி நூலிழையில் உயிர்தப்பினார். 

உத்தரகண்ட் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரமேஷ் ரங்கநாதன். இவர் தேவப்பிரயாகை நகரில் சங்கம் எனும் இடத்தில் நேற்று புனித நீராடினார். அப்போது கால்தவறி அவர் ஆற்றில் விழ முயன்றார். ஆனால் அருகில் இருந்த பாதுகாவலர்கள் உடனடியாக அவரை தாங்கி பிடித்து காப்பாற்றினர்.

இதனால் அவர் நீரில் விழாமல் நூலிழையில் உயிர் தப்பினார். இந்த இடத்தில் அலக்நந்தா மற்றும் பாகீரதி என்ற 2 ஆறுகள் ஒன்றாக இணைந்து கங்கையாக உருவெடுக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.