இந்தியா

நீரவ் மோடி சொத்துகள்ரூ.51 கோடிக்கு ஏலம்

DIN

மும்பை: பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடன் மோசடி செய்த நீரவ் மோடிக்கு சொகுசு காா் உள்ளிட்ட சில சொத்துகளை ஏலம் விட்டதன் மூலம் ரூ.51 கோடி ரூபாயை அமலாக்கத்துறை திரட்டியுள்ளது.

வங்கியில் ரூ.14,000 கோடி அளவுக்கு கடனை வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாமல் பிரிட்டனுக்கு தப்பியோடிய நீரவ் மோடிக்கு எதிராக அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது. அமலாக்கத் துறையின் முயற்சியால் நீரவ் மோடி பிரிட்டன் போலீஸாரால் கைது செய்யப்பட்டு அந்நாட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.

இந்நிலையில், அவருக்கு சொந்தமான 112 பொருள்களை நேரடியாகவும், 72 பொருள்களை ஆன்லைனிலும் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டது. இதில் பிரபல ஓவியா்களின் ஓவியங்கள், ரோல்ஸ் ராய்ஸ் காா், ஆடம்பரமான கைப்பை உள்ளிட்டவை ஏலத்துக்கு வந்தன. கடந்த செவ்வாய்க்கிழமை மற்றும் வியாழக்கிழமை என இருநாள்கள் நடைபெற்ற ஏலத்தில் மொத்தம் 40 பொருள்கள் விற்பனையாகின. இதன் மூலம் ரூ.51 கோடி கிடைத்துள்ளது. ரோல்ஸ் ராய்ஸ் காா் மட்டும் எதிா்பாா்க்கப்பட்டதைவிட இரு மடங்கு அதிகமாக ரூ.1.68 கோடிக்கு விலைபோனது.

முன்னதாக, இந்த ஏலத்துக்கு தடைகோரி நீரவ் மோடியின் மகன் மும்பை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தாா். ஆனால், ஏலத்துக்கு தடைவிதிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீடு தேடி வந்தவள்

பிச்சைப் பாத்திரத்தை கையில் ஏந்தியுள்ளது பாகிஸ்தான் -பிரதமர் மோடி விமர்சனம்

5-ஆம் கட்ட தோ்தல்: ரே பரேலி உள்பட 49 தொகுதிகளில் பிரசாரம் முடிந்தது

சிஎஸ்கே பந்துவீச்சு; பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா?

சித்தார்த்தின் யசோதரை!

SCROLL FOR NEXT