இந்தியா

கேரளத்தில் கரோனா பாதித்த பெண்ணின் உடல்நிலை கவலைக்கிடம்

PTI


கோட்டயம்: கேரளத்தில் கரோனா பாதித்து கோட்டயம்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 85 வயது பெண்ணின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கோட்டயம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 85 வயது பெண்ணுக்கு ஏற்கனவே இதய நோய் உள்ளிட்டவை இருப்பதால், அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வரும் அவரது 96 வயது கணவரின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த முதியவர்கள், இத்தாலியில் இருந்து கேரளம் வந்த போது கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட நபரின் பெற்றோராவார்.

இத்தாலியில் இருந்து கணவன் -  மனைவி மற்றும் அவர்களது 24 வயது மகன் ஆகியோர் கடந்த பிப்ரவரி மாதம் 29ம் தேதி கேரளாவுக்குத் திரும்பினர். இவர்களுக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், அவர்களது பெற்றோருக்கும் கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது.

இதற்கிடையே, திருவாத்துக்கல் பகுதியில் கிளினிக் நடத்தி வரும் மருத்துவரிடம், கரோனா வைரஸ் பாதித்த நபர்கள் இரண்டு பேர், ஆரம்பநிலையில் காய்ச்சல் வந்த போது சிகிச்சை பெற்றது தெரிய வந்ததை அடுத்து, அவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 பொதுத் தேர்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 93.17% தேர்ச்சி

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் பெயர் அறிவிப்பு!

கேரளம்: விடுதி கட்டடத்தில் இருந்து குதித்து என்ஐடி மாணவர் தற்கொலை

அனைத்து மாவட்டங்களும் 90%-க்கு மேல் தேர்ச்சி!

தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் எப்போது கிடைக்கும்?

SCROLL FOR NEXT