இந்தியா

இத்தாலி, பிரான்ஸ் உள்ளிட்ட 7 நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்: ஏர் இந்தியா அறிவிப்பு

இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின், இஸ்ரேல், தென் கொரியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கான விமானங்களை ஏப்ரல் 30 ஆம் தேதி வரை ரத்து செய்ய ஏர் இந்தியா முடிவு செய்துள்ளது.

DIN

இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின், இஸ்ரேல், தென் கொரியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கான விமானங்களை ஏப்ரல் 30 ஆம் தேதி வரை ரத்து செய்ய ஏர் இந்தியா முடிவு செய்துள்ளது.

உலகில் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் கரோனா தொற்று பரவி வரும் நிலையில், அந்தந்த நாடுகள் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. 

இந்நிலையில், இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின், இஸ்ரேல், தென் கொரியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கான விமானங்களை ஏப்ரல் 30 ஆம் தேதி வரை ரத்து செய்ய ஏர் இந்தியா முடிவு செய்துள்ளதாக விமான அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

முன்னதாக, இத்தாலி, பிரான்ஸ் உள்ளிட்ட பெரும்பாலான ஐரோப்பிய வழித்தடங்களில் ஏர் இந்தியா தனது விமான சேவையை குறைத்தது. இதன் தொடர்ச்சியாக, தற்போது மேற்குறிப்பிட்ட நாடுகளுக்கு தற்காலிகமாக விமான சேவையை ரத்து செய்ய முடிவு செய்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமா் மோடி பிப்.28-இல் தமிழகம் வருகை!

அரையிறுதிக்கு முன்னேறப் போவது யார்? தெ.ஆப்பிரிக்காவை சந்திக்கும் மேற்கிந்தியத் தீவுகள்!

தேவை கட்டாய வெற்றி; இன்று ஜிம்பாப்வேயுடன் களமாடும் இந்தியா!

ஓய்வறியாப் போராளிக்குப் பிரியாவிடை!

வேளாண் அறிவியல் நிலையத்தில் ரிசா்வ் வங்கி அதிகாரி ஆய்வு

SCROLL FOR NEXT