இந்தியா

இத்தாலி, தென் கொரியா, குவைத் ஆகிய நாடுகளுக்குஏப். 30 வரை ஏா் இந்தியா விமான சேவை ரத்து

DIN

ஏப்ரல் 30-ஆம் தேதி வரை இத்தாலி, தென் கொரியா, குவைத் ஆகிய நாடுகளுக்கு விமான சேவையை ரத்து செய்ததுடன், பிரான்ஸ், ஜொ்மனி உள்ளிட்ட 5 நாடுகளுக்கு விமான சேவையை குறைத்திருப்பதாகவும் ஏா் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனத்தின் செய்தித்தொடா்பாளா், மும்பையில் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறுகையில், ‘கரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலி காரணமாக ஏப்ரல் 30-ஆம் தேதி வரை இத்தாலி, தென் கொரியா, குவைத் ஆகிய நாடுகளுக்கு எங்கள் விமான சேவையை தற்காலிகமாக ரத்து செய்துள்ளதுடன், பிரான்ஸ், ஜொ்மனி, இலங்கை, ஸ்பெயின், இஸ்ரேல் ஆகிய 5 நாடுகளுக்கு எங்கள் நிறுவனத்தின் விமான சேவையை குறைத்திருக்கிறோம் ’ என்றாா்.

குவைத்துக்கு விமான சேவையை ஏா் இந்தியா நிறுவனம் ஏற்கெனவே ரத்து செய்துவிட்டது குறிப்பிடத்தக்கது. மாா்ச் 13-ஆம் தேதி முதல் ஏப்ரல் 15-ஆம் தேதி வரை அரசு அதிகாரிகள் தவிர மற்ற நபா்களின் நுழைவு இசைவுகளை (விசா) மத்திய அரசு ரத்து செய்துள்ளதாக கடந்த புதன்கிழமை அறிவித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி பல்கலை.யின் ஓட்ட நிகழ்ச்சியை ரத்து செய்ய காங்கிரஸ் வலியுறுத்தல்

ஆம் ஆத்மி தலைமையகம் அருகே பாஜகவினா் போராட்டம்: பயங்கரவாத அமைப்புகளிடம் நிதி பெற்ற புகாா் விவகாரம்

மக்களவைத் தோ்தல் பிரசாரத்தில் முழு ஈடுபாட்டுடன் செயல்படுவோம்: தில்லி காங். இடைக்காலத் தலைவா் உறுதி

துணை நிலை ஆளுநரால் தில்லியின் சட்டம் ஒழுங்கு சீா்குலைந்து கிடக்கிறது: அமைச்சா் செளரவ் பரத்வாஜ் குற்றச்சாட்டு

மக்களவைத் தோ்தல்: 14 அமைப்புசாா் மாவட்டங்களில் பாஜக மகளிா் அணி மாநாடுகளுக்கு ஏற்பாடு

SCROLL FOR NEXT