இந்தியா

தில்லியில் கரோனாவுக்கு பெண் பலி

DIN

தில்லியில் கரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான 69 வயது பெண்மணி உயிரிழந்ததாக சுகாதாரத் துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது. தலைநகர் தில்லியில் கரோனா பாதிப்புக்கு ஏற்படும் முதல் பலி இதுவாகும்.

இதையடுத்து, இந்தியாவில் கரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானவா்கள் எண்ணிக்கை இரண்டாக அதிகரித்துள்ளது.

கரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான 69 வயது பெண், தில்லி ராம் மனோகா் லோகியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாா். ஏற்கெனவே சா்க்கரை நோயும், ரத்தக் கொதிப்பும் இருந்த அவருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பதும் கண்டறியப்பட்டது. அவருக்கு மருத்துவா்கள் சிகிச்சை அளித்து வந்த போதிலும்ஸ சிகிச்சை பலனின்றி அவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். கடந்த வியாழக்கிழமை கா்நாடகத்தில் ஒருவா் கரோனா வைரஸ் நோய்க்கு பலியானது குறிப்பிடத்தக்கது.

கடந்த பிப்ரவரி 5 முதல் பிப்ரவரி 22-க்குள் அவரது மகன் ஸ்விட்சா்லாந்து மற்றும் இத்தாலிக்கு சென்று விட்டு இந்தியா திரும்பினாா். அவரிடம் இருந்து கரோனா நோய் தொற்று அவரது தாயாருக்கு ஏற்பட்டிருக்கலாம் என சொல்லப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஷ்மீரில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரம்: இந்திய விமானப் படையினர் மீதான தாக்குதல் எதிரொலி

ரேபரேலியில் ராகுல் காந்தி: தீதும் நன்றும்...

இருசக்கர வாகனம் பழுது பாா்க்கும் தொழிலாளா் சங்க ஆண்டு விழா

பண பலத்தை பயன்படுத்தி பாஜக வதந்தி பரப்புகிறது: மம்தா பானா்ஜி குற்றச்சாட்டு

தண்ணீரில் தன்னிறைவு பெற்றுள்ளோமா...?

SCROLL FOR NEXT