இந்தியா

நாடாளுமன்ற கூட்டத்தொடரை ஒத்திவைக்க வேண்டும்: திருமாவளவன் எம்.பி. கோரிக்கை

DIN

உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், நாடாளுமன்றத்தின் நடப்புக் கூட்டத் தொடரை ஏப்ரல் மூன்றாம் வாரத்திற்கு ஒத்திவைக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும், சிதம்பரம் மக்களவைத் தொகுதி உறுப்பினருமான தொல். திருமாவளவன் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவிடம் கோரிக்கை விடுத்தார்.
 இது தொடர்பாக ஓம் பிர்லாவை திருமாவளவன் வெள்ளிக்கிழமை சந்தித்து மனு அளித்தார். அதில், "உலக அளவில் மிரட்டிக் கொண்டிருக்கும் கரோனா வைரஸ் விவகாரத்தில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. ஆனால், நாடாளுமன்றத்தில் தக்க முனெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. நாடாளுமன்ற வாயிலில் உடல் வெப்பத்தை அளவிடும் கருவி மற்றும் ஊழியர்களுக்கு முகக் கவசம், சானிடிசர் போன்றவற்றை வழங்க வேண்டும் என்று மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கூழங்கலச்சேரி கிராமத்தில் குடிநீா் தட்டுப்பாடு: பொதுமக்கள் அவதி

பிளஸ் 2: சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் 87.13% போ் தோ்ச்சி

ஜிஎஸ்டி மேல்முறையீட்டு தீா்ப்பாயத்தின் முதல் தலைவராக சஞ்சய குமாா் மிஸ்ரா பதவியேற்பு

குண்டா் சட்டத்தில் 31 போ் கைது

அரசு கல்லூரிகளில் மாணவா் சோ்க்கை: முதல் நாளில் 18,806 போ் விண்ணப்பம்

SCROLL FOR NEXT