முகப்பு
இந்தியா

கரோனாவை பேரிடராக மாநில அரசு கருத வேண்டும்: மத்திய அரசு அறிவிப்பு

கரோனாவை பேரிடராகக் கருதி மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் சனிக்கிழமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:11 PM
பகிர்:

கரோனாவை பேரிடராகக் கருதி மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் சனிக்கிழமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், 

கரோனா வைரஸ் (கொவைட்-19) பாதிப்பை ஒவ்வொரு மாநிலமும் பேரிடராகக் கருதி நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநில பேரிடர் நிதியில் (எஸ்.டி.ஆர்.எஃப்) இருந்து கரோனா பாதிப்பு தொடர்பான நடவடிக்கைகளுக்கு பயன்படுத்திக்கொள்ளலாம்.

கரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரண நிதி வழங்குவது மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் மருத்துவச் செலவுகளை மாநில அரசுகள் நிர்ணயிக்கும். தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கும் மாநிலப் பேரிடர் நிதியைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.