முகப்பு
இந்தியா

காஷ்மீர் துப்பாக்கிச் சண்டையில் பயங்கரவாதிகள் 4 பேர் பலி

காஷ்மீரில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் பயங்கரவாதிகள் நான்கு பேர் பாதுகாப்புப்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:11 PM
பகிர்:

காஷ்மீரில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் பயங்கரவாதிகள் நான்கு பேர் பாதுகாப்புப்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

காஷ்மீர் அனந்த்நாக் அருகே டயல்காம் கிராமத்தின் அருகே பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக வந்த தகவலையடுத்து, பாதுகாப்புப் படையினர் அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு பதுங்கியிருந்த தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச்சண்டையில் பயங்கரவாதிகள் நால்வர் சுட்டுக்கொல்லப்பட்டனர். சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதிகளிடம் இருந்து ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும், உயிரிழந்த பயங்கரவாதிகளை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது.

தொடர்ந்து தேடுதல் வேட்டையில் பாதுகாப்புப்படையினர் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.