இந்தியா

கரோனா அச்சம்: அந்தமான் - நிகோபாரில் சுற்றுலாத் தலங்கள் மூடல்

DIN


புது தில்லி: கரோனா வைரஸ் பரவலையடுத்து அனைத்து சுற்றுலாத் தலங்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று முதல் மூடப்படும் என்று அந்தமான் - நிகோபார் நிர்வாகம் அறிவித்துள்ளது.

நோவல் கரோனா வைரஸ் பரவலையடுத்து, அந்தமான் - நிகோபார் நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முக்கிய முடிவை எடுத்துள்ளது. கடற்கரைகள், சுற்றுச்சூழல் சுற்றுலாத் தலங்கள், நீர் விளையாட்டுகள் ஆகியவை இன்று (மார்ச் 16) முதல் மூடப்பட்டிருக்கும்.

தீவுகளில் உள்ள அனைத்து சுற்றுலாத் தலங்களையும் இன்று (மார்ச் 16) முதல் இம்மாதம் 26ம் தேதி வரை மூடுமாறு அந்தமான் - நிகோபார் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. 

இந்த காலகட்டத்தில் சுற்றுலாப் பயணிகள் அந்தமான் - நிகோபார் தீவுகளுக்கு வராமல் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். கடற்கரைகள், சுற்றுச்சூழல் சுற்றுலாத் தலங்கள், நீர் விளையாட்டு நடவடிக்கைகள் ஆகிய அனைத்து சுற்றுலா செயல்பாடுகளும் தற்காலிகமாக ரத்து செய்யப்படுகின்றன. 

அனைத்து சுற்றுலா இயக்குனர்களும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு இதனை தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அயலக தமிழர்கள் பதிவு செய்ய அழைப்பு

வீட்டிலிருந்தபடியே வாக்களித்த மூத்த அரசியல் தலைவர்கள்!

கேள்விக்குறியாகும் மாஞ்சோலை தொழிலாளர்களின் எதிர்காலம்: சீமான்

ஒற்றை ரோஜா... ஷிவானி நாராயணன்!

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா?

SCROLL FOR NEXT