இந்தியா

மார்ச் 20-இல் தூக்கு: சர்வதேச நீதிமன்றத்தில் நிர்பயா குற்றவாளிகள் முறையீடு

DIN


நிர்பயா வழக்கு குற்றவாளிகள் நால்வரில் மூன்று பேர் தங்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை நிறுத்திவைக்கக்கோரி சர்வதேச நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளனர்.

நிர்பயா வழக்கு குற்றவாளிகளான முகேஷ் சிங், அக்ஷ்ய் சிங், பவன் குப்தா, வினய் சர்மா ஆகிய நால்வருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மரண தண்டனையை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்த கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. உச்சநீதிமன்றம் வரை சென்று பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்தும், மரண தண்டனையை அவர்களால் தள்ளிப்போட மட்டுமே முடிந்தது. 

அவர்களுடைய அனைத்து சட்ட வாய்ப்புகளும் முடிவுக்கு வந்ததையடுத்து, பல்வேறு தேதி மாற்றங்களுக்குப் பிறகு இறுதியாக மார்ச் 20-ஆம் தேதி காலை 5.30 மணிக்கு நால்வரும் தூக்கிலிடப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

இதையடுத்து முகேஷ் சிங், "தனது முந்தைய வழக்குறிஞர் தவறாக வழிநடத்தியதால், தனக்கான அனைத்து சட்ட வாய்ப்புகளையும் திரும்ப ஏற்படுத்தித் தருமாறு" உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இதையும் உச்ச நீதிமன்றம் இன்று (திங்கள்கிழமை) தள்ளுபடி செய்தது.

இந்நிலையில், தங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை நிறுத்திவைக்கக்கோரி அக்ஷ்ய் சிங், பவன் குப்தா மற்றும் வினய் சர்மா ஆகியோர் சர்வதேச நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

தில்லி கலால் ஊழல் வழக்கு முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் நீதிமன்றக் காவல் மே 20 வரை நீட்டிப்பு

தில்லியில் சட்டம் - ஒழுங்கு சீா்குலைந்ததாக துணை நிலை ஆளுநா் மீது ஆம் ஆத்மி புகாா்

SCROLL FOR NEXT