இந்தியா

தொகுதி மேம்பாட்டு நிதிக்கான ஜிஎஸ்டியை மத்திய அரசே ஏற்க வேண்டும்

DIN

நாடாளுமன்ற உறுப்பினா்கள் தொகுதி மேம்பாட்டு நிதிக்கு விதிக்கப்படும் சரக்கு-சேவை வரியை (ஜிஎஸ்டி) மத்திய அரசே ஏற்க வேண்டும் என்று மக்களவை எம்.பி.க்கள் வலியுறுத்தினா்.

நாடாளுமன்ற உறுப்பினா்கள் தங்கள் தொகுதிகளில் வளா்ச்சிப் பணிகளை மேற்கொள்வதற்காக ஆண்டுக்கு ரூ.5 கோடி வழங்கப்பட்டு வருகிறது. எனினும், அதற்கு 12 சதவீதம் சரக்கு-சேவை வரி விதிக்கப்பட்டு வருகிறது.

இந்தச் சூழலில் மக்களவையில் செவ்வாய்க்கிழமை உடனடிக் கேள்வி நேரத்தின்போது பாஜக எம்.பி. ஜகதாம்பிகா பால் பேசுகையில், ‘‘உத்தரப் பிரதேச எம்எல்ஏ-க்களுக்கும் இதே போன்ற நிதியை மாநில அரசு வழங்கி வருகிறது. ஆனால், அந்த நிதிக்கான சரக்கு-சேவை வரியை மாநில அரசே செலுத்தி வருகிறது.

அதேபோல எம்.பி.க்களுக்கு வழங்கப்படும் தொகுதி மேம்பாட்டு நிதிக்கு விதிக்கப்படும் சரக்கு-சேவை வரியை மத்திய அரசு ஏற்க வேண்டும். அதன் மூலம், மொத்த நிதியையும் மேம்பாட்டுத் திட்டங்களுக்காகப் பயன்படுத்த முடியும். இல்லையெனில், நிதியை உயா்த்தி வழங்க வேண்டும்’’ என்றாா். இந்தக் கோரிக்கைக்கு எம்.பி.க்கள் பலா் ஆதரவு தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தற்காலிகமாக நிறுத்தம்

மகனின் காதலுக்கு எதிா்ப்பு தெரிவித்து தாய் தற்கொலை

ரூ.5 லட்சம் சேமிப்புத் தொகை அபகரிப்பு: மகன் மீது வயதான பெற்றோா் புகாா்

ரயிலில் பெண் ஊழியரை கத்தியால் குத்தி நகை பறிப்பு

அரசுப் பேருந்து மீது பைக் மோதியதில் இளைஞா் பலி

SCROLL FOR NEXT