இந்தியா

மலேசியாவில் 200க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் சிக்கித் தவிப்பு!

DIN

பிலிப்பைன்ஸில் இருந்து விமானம் மூலமாக புறப்பட்ட இந்திய மாணவர்கள் 200க்கும் மேற்பட்டோர் தாயகம் திரும்ப முடியாமல் மலேசிய விமான நிலையத்தில் சிக்கியுள்ளனர். 

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் உள்ள மருத்துவப் பல்கலைக்கழகத்தில் இந்திய மாணவர்கள் ஆயிரக்கணக்கானோர் படித்து வருகின்றனர். இந்நிலையில் கரோனா அச்சுறுத்தல் காரணமாக மணிலா பல்கலைக்கழகத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும்,  பிலிப்பைன்ஸ் அரசு பல கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது. 

இதனால் அங்கு பயிலும் இந்திய மாணவர்கள் தாயகம் திரும்பும் முயற்சியில் கடந்த மூன்று தினங்களாக முயற்சி செய்து வருகின்றனர். 

தொடர்ந்து, தமிழக மாணவர்கள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் இன்று மலேசியா வழியாக இந்தியா திரும்ப முயன்ற நிலையில், இந்தியாவுக்கு வரும் விமானங்கள் தடை செய்யப்பட்டுள்ளதால் அவர்கள் மலேசியா கோலாலம்பூர் விமான நிலையத்தில் சிக்கித் தவித்து வருகின்றனர். 

உடனடியாக தாங்கள் இந்தியா திரும்ப மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அதேபோன்று தமிழக மாணவர்களும் நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசுக்கு கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

இதுதவிர மேலும் நூற்றுக்கணக்கான இந்திய மாணவர்கள் தாயகம் திரும்ப முடியாமல் மணிலாவில் சிக்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போக்குவரத்து ஊழியா்கள் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு

திருவான்மியூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

3,200 போதை மாத்திரைகள் பறிமுதல்: 6 போ் கைது

புழல் சிறையில் கைதியிடம் கைப்பேசி பறிமுதல்

ஆண்களிடம் ஆபாசமாக பேசி பணம் பறிப்பு: 5 போ் கைது

SCROLL FOR NEXT