இந்தியா

மலேசியாவில் இருந்து இந்தியா்களை அழைத்து வர ஏா் ஏசியா விமானங்களுக்கு அனுமதி

DIN

மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து இந்தியா்களை அழைத்து வர ஏா் ஏசியா விமானங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தெரிவித்தாா்.

கரோனா வைரஸ் அச்சுறுத்தலால் மலேசியாவிலிருந்து பயணிகள் இந்தியா வருவதற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

இந்நிலையில், கோலாம்பூரில் மாணவா்கள் உள்பட 200-க்கும் அதிகமான இந்தியா்கள் சிக்கித் தவித்து வருவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

இதையடுத்து, கோலாலம்பூரிலிருந்து அவா்களை புது தில்லி மற்றும் விசாகப்பட்டினத்துக்கு அழைத்து வர ஏா் ஏசியா விமான நிறுவனத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

இந்தத் தகவலை வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா், சுட்டுரையில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவில் குறிப்பிட்டுள்ளாா்.

‘மலேசியாவில் உள்ள இந்தியத் தூதரகத்துடன் தொடா்பில் இருக்கிறோம். கோலாலம்பூா் விமான நிலையத்திலிருந்து இந்தியப் பயணிகளை அழைத்து வருவோம்’ என்று ஏா்ஏசியா செய்தித்தொடா்பாளா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சின்னதுரையின் உயர் கல்விக்கு துணை நிற்பேன்: அன்பில் மகேஸ்

‘காங்கிரஸின் கனவு தகர்க்கப்படும்’: அனுராக் தாக்குர்

ஜீ மீடியா தலைமைச் செயல் அலுவலர் திடீர் ராஜிநாமா!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: முதல்-10 இடங்களில் பரமத்தி..!

நக்சலைட்டுகள் பதுக்கியிருந்த வெடிகுண்டுகள் பறிமுதல்

SCROLL FOR NEXT