இந்தியா

தனிமைப்படுத்திக் கொண்ட பாஜக எம்பி சுரேஷ் பிரபு

DIN

கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பாஜக எம்பி சுரேஷ் பிரபு தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

கடந்த 10ஆம் தேதி சவூதி அரேபியாவில் நடந்த இரண்டாவது ஷெர்பாஸ் கூட்டத்தில் பாஜக எம்பி சுரேஷ் பிரபு உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதைத்தொடர்ந்து இந்தியா திரும்பிய அவர் கரோனா பரிசோதனை மேற்கொண்டார். பரிசோதனையில் அவருக்கு கரோனா பாதிப்பு இல்லை என உறுதியானது. 

எனினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அடுத்த 14 நாட்களுக்கு தனது இல்லத்தில் தனிமையில் இருக்கப் போவதாக அவர் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே தனிமைப்படுத்திக் கொண்ட மத்திய அமைச்சர் முரளிதரனுக்கு கரோனா பாதிப்பு இல்லை என்பது நேற்று உறுதியானது குறிப்பிடத்தக்கது. 

உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கரோனாவுக்கு இந்தியாவில் இதுவரை 147 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு: சென்னையில் தொழிலாளி பலி

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம்: கொடியேற்றத்துடன் தொடங்கியது!

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

SCROLL FOR NEXT