இந்தியா

உ.பி.யில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை மாணவர்கள் தேர்வு எழுதத் தேவையில்லை: முதல்வர் அறிவிப்பு

கரோனா எதிரொலியாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் உத்தரப் பிரதேசத்தில் 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி செய்யப்படுவார்கள் என அறிவிப்பு

DIN

கரோனா எதிரொலியாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் உத்தரப் பிரதேசத்தில் 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை மாணவர்கள் அனைவரும் தேர்வு எழுதாமலே தேர்ச்சி செய்யப்படுவார்கள் என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். 

சீனாவில் உருவான கரோனா வைரஸ் இன்று உலகில் 120க்கும் மேற்பட்ட நாடுகளில் தீவிரமாகப் பரவி வருகிறது. இந்தியாவிலும் கரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 147 ஆக அதிகரித்துள்ளது. பலியானோர் எண்ணிக்கை 3 ஆக உள்ளது. தொடர்ந்து, கரோனா தொற்றைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. 

கரோனா தடுப்பு நடவடிக்கையாக இந்தியா முழுவதுமே பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதையடுத்து, உத்தரப் பிரதேசத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை மாணவர்கள் அனைவரும் தேர்வு எழுதத் தேவையில்லை எனவும் அவர்கள் அனைவரும் தேர்வு எழுதாமலே தேர்ச்சி செய்யப்பட்டு அடுத்த வகுப்புக்கு அனுப்பப்படுவார்கள் எனவும் முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.

முன்னதாக, தொடக்கப்பள்ளிகளில் மார்ச் 23 முதல் 28 வரை தேர்வு நடத்த மாநில அரசு திட்டமிட்டிருந்தது. ஆனால், கரோனா பாதிப்பு காரணமாக பள்ளிகளுக்கு ஏப்ரல் 2 ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமா் மோடி பிப்.28-இல் தமிழகம் வருகை!

அரையிறுதிக்கு முன்னேறப் போவது யார்? தெ.ஆப்பிரிக்காவை சந்திக்கும் மேற்கிந்தியத் தீவுகள்!

தேவை கட்டாய வெற்றி; இன்று ஜிம்பாப்வேயுடன் களமாடும் இந்தியா!

ஓய்வறியாப் போராளிக்குப் பிரியாவிடை!

வேளாண் அறிவியல் நிலையத்தில் ரிசா்வ் வங்கி அதிகாரி ஆய்வு

SCROLL FOR NEXT